Sunday, January 2, 2011

முதல் கவிதை

பிளாக்கில் எழுதுவது என்பது ஏனோ ஒரு லட்சம் பார்வையாளர்கள் இருக்கும் அரங்கில் முதன்முதலாய் பேச இருப்பவனின் மனநிலையே எனக்கு ஏற்படுகிறது. என் profile-ல் இருக்கும் வலைதல முகவர்கள் மற்றும் இன்ன பலரின் உயரங்களும் என்னை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. அவர்களின் எழுத்துப் பயண ஓட்டத்தில் நான் சிற்றெறும்பாக நகர்ந்து கொண்டிருப்பதை என்னால் உணர முடிகிறது. எனக்கு இந்த இணையதள உலகம் புதிது. என் எழுத்தறிவை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி கூடமாகவே இந்த வலைத்தளத்தை பயன்படுத்திக் கொள்கிறேன். பள்ளிப் பருவ வயதில் தமிழ் இலக்கிய பரப்பில் மழைக்கு கூட ஒதுங்காதவன் நான். இப்போது அதன் பலம் என்னை பயமுறுத்துகிறது. கவிதை என்றால் யாப்பு, அணி, சீர், வரிசை என அடிப்படை அறிவற்றவனனின் கவிதைகளுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் கீழே உள்ள எனது கவிதைகளை எண்ணிக் கொள்கிறேன். என்ன தான் நான் இப்போது 'புறநானுறு ஓர் எளிய அறிமுகம்', 'ஹைக்கூ எழுதுவது எப்படி?' புத்தகமும் 'இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்' என்கிற பின்நவீனத்துவ கவிதைகளை வாசித்தாலும் அந்த தளத்தில் நான் பயணிக்க முதலில் தீவிர வாசிப்பு அனுபவம் பெற வேண்டும்.
அதுவரை என் நசுங்கிய கவிதைகளே உங்களுக்கு.....


அன்பெனும் ஆடையை அம்மாவிற்கு
அளித்து விட்டு அம்மணமாய் நிற்கிறது
அவளின் குழந்தை.
---------------------------------------------------------------
ஜன்னலருகில் எழுதாத புத்தகத்தில்
எழுதிய கவிதையாய்
மழைச்சாரலின் ஈரம்.
---------------------------------------------------------------
உன் நினைப்பு வரும் போதெல்லாம்
கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறேன்
உன்னை.
---------------------------------------------------------------
தமிழின் உயிர் எழுத்தும், மெய் எழுத்தும்
மஞ்சள் நீராடியது நீ
வயதிற்கு வந்தபோது.
---------------------------------------------------------------
விட்டில் பூச்சியின் வெளிச்சத்தில்
காண நேர்ந்தது
உன் கண்களில் என் காதலை.
---------------------------------------------------------------
என் மஞ்சள் போர்வைக்குள்
காண்கிறேன்
உன் படுக்கைப் பார்வையை.
---------------------------------------------------------------
எச்சிலை கூட்டி நீ விழுங்குகையில்
என் உலகிற்கான தாகம்
தணிகிறது.
---------------------------------------------------------------

2 comments:

Pradeep said...

My best wishes for you in this new assignment...

Idhai paarkum poludhu "nee ammanmaga nindru kondirukkum kulandhaiyai indha kavidhai ulagirku..."

Valarndhu Saadika en anbu vazthukal... Pradeep Thiyagarajan.

KAVINTAMIL said...

கவிதை நல்ல முயற்சி. தொடர்ந்து எழுதவும்