Monday, January 3, 2011

டிவிட்டர்...எனும் சங்கதி

திறந்தவெளி புத்தகமாக இருந்தாலும் என் போன்றோருக்கு TWITTER, FACEBOOK, ORKUT இன்னபிற சமூக வலைத்தலங்கள் ஒரு வரப்பிரசாதம் தான். பிரபல பிண்ணணி பாடகி சின்மயி-க்கும் எனக்கும் நடந்த டிவிட் பரிமாற்றத்தை கீழே கொடுத்துள்ளேன்.

Chinmayi; I won first award for VARAAYO on 1-1-10.
It was quite a year.
Thank you for Red giant movies....

expertsathya; Ur thx not only goes 2 red giant.
It goes Harish & whole film team.
என் டிவிட்ட ரெஸ்பான்ஸ் கொடுத்து உடனே மன்னிப்பு கேட்டு அதுக்கு ரீடிவிட்டும் கொடுத்தாங்க...
Chinmayi; They retained the song as producers &
didn't replace it & hence thanks 2 them the
director & the whole team too....

ஒரு கலைஞனுக்கும் ஒரு ரசிகனுக்கும் இது போன்ற வலைத்தலங்களால் நெருக்கம் அதிகமாவதை
மறுக்க முடியாது. நான் தவறை சுட்டிக் காட்டியவுடன் அதை திருத்தி ரீடிவிட் செய்து போஸ்ட் செய்தார்
சின்மயி.

ஜூலை 15-2006 அன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த டிவிட்டர் எனும் சமுக வலைத்தலம் இன்று
190 மில்லியன் பயனீட்டாளர்களை கொண்டு இருப்பதாக டிவிட்டர் நிருவனர் JACK DORSEY
சமீபத்தில் ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார்.
பேயான் என்பவர் தனது முக்கிய 1000 டிவிட்களை இலவச பதிவிறக்கத்தில் தனது
வலைத்தலத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
அமிதாப், ரஹ்மான், ஷாருக் போன்றவர்கள் தினசரி தங்கள் நடவடிக்கைகளை
டிவிட்டரில் போஸ்ட் செய்கின்றனர்.
மேற்கண்டவர்களை follow செய்ய விரும்பினால் என் டிவிட்டருக்கு செல்லவும்.
சமுக ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும் இது போன்ற தலங்களில் தங்கள்
கருத்துக்களை வெளியிடலாம்...

எனக்கு பிடித்த சில டிவிட்கள்....
உணவு என்றால் பரிமாறிக்கொண்டு பசியாருவேன்.
இரை என்றால் அடித்துதின்று தான் பசியாருவேன்.
நீ எனக்கு உணவா... இரையா? நீ தான் தீர்மானிக்கிறாய்!!!
- kuttiRevathi@twitter.com.
புது தோடு கேட்கிறாள் மனைவி.
'தேர்தல் வரட்டும் பார்க்கலாம்!' என்று
சொல்லியிருக்கிறேன் ### பணநாயகம்...
- thirumarant@twitter.com.

தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட தயாரா?- பா.ஜ.க
### கொழந்தீங்களா...இங்க விளாடாதீங்க...பந்து மேல பட்டுடும்...
ஓரமா போயி விளாடுங்க!!!!
- rajan&allinall@twitter.com.

நீதி: ஆகவே டிவிட்டரில் இணையுங்கள்...புது உலகில் வாழுங்கள்.

1 comment:

KAVINTAMIL said...

Nice coments about Twitter