Tuesday, May 24, 2011

தவற விடும் தருணங்கள்

நீங்கள் புறக்கணித்து
விடுகிறீர்கள்...

பேருந்தில் ஜன்னலோரக்
குழந்தையின் கையசைப்பை

நீங்கள் புறக்கணித்து
விடுகிறீர்கள்...

உதிர்ந்து விழும் ஒரு
மலரின் மரணத்தை

நீங்கள் புறக்கணித்து
விடுகிறீர்கள்...

உட்கார்ந்து கொண்டே தூங்கும்
பேருந்துப் பயணி ஒருவனை

நீங்கள் புறக்கணித்து
விடுகிறீர்கள்...

தூக்கிலிடப்படும் ஒருவனின்
உறங்காத கருவிழிகளை

நீங்கள் புறக்கணித்து
விடுகிறீர்கள்...

மூலையில் வீசி எறியப்பட்ட
ஒரு தொப்புள் கொடியினை

நீங்கள் புறக்கணித்து
விடுகிறீர்கள்...

கேட்பாரற்றுக் கிடக்கும்
அழுகிய அநாதைப் பிணத்தை

நீங்கள் புறக்கணித்து
விடுகிறீர்கள்...

சரியான இடத்திற்கு கொண்டு விடும்
ஆட்டோ டிரைவரை

இறுதியாய்
நீங்கள் புறக்கணித்து
விடுகிறீர்கள்...

இயற்கையாய் தழுவும்
மரணத்தை...

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

இயற்கையாய் தழுவும்
மரணத்தை...
தவற விடும் தருணங்கள்"---துயரம்.

... said...

உங்களின் கருத்திற்கு நன்றி. உங்கள் வலைபதிவில் "இயற்கையின் எழிலில் இறைவன்" தலைப்பிலான பதிவை ரசித்தேன்.