Friday, July 8, 2011

மனதில் கிடந்தவை...


தவறின் ருசி
-----------------------
ஒரு குற்றவாளிக்குக் கூட
சில விதிமுறைகளை விட்டுத் தருகிறோம்

சில பொய்களைக் கூட
லாவகமாக நிஜமாக்கி விடுகிறோம்

சில தவறுகளைக் கூட
அநீதியாய் சரிசெய்து விடுகிறோம்

சில ஏமாற்றங்களைக் கூட
சகிப்போடு ஏற்றுக் கொள்கிறோம்


சில ஆறுதலைக் கூட
முழுமனதோடு பெற்றுக் கொள்கிறோம்

சில ஆசைகளைக் கூட
கண்ணியத்தோடு நிராகரித்து விடுகிறோம்

சில இம்சைகளைக் கூட
அஹிம்சையோடு தாங்கிக் கொள்கிறோம்

ஆனால் நாம்,
நல்ல மனிதர்களாக இருக்க
எப்போதும் தவறிக் கொண்டேயிருக்கிறோம்.

------------------------------------------------------------------------------------

பாட்டிக்கான படையல்
---------------------------------

தலைவாழை நிறைய
கூட்டு, பொறியல், சுடு சோறு
பலகாரம், அப்பளம்
ஒரு கட்டு வெற்றிலை, பாக்கு
புகையிலை, சுண்ணாம்பு
கலர் சோடா பாட்டில்
சொம்பு நிறைய சுடுநீர்

எல்லாம்
பாட்டிக்கு பறிமாறப்பட்டது
அவளின் இறுதிச் சடங்கில்.

3 comments:

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை மனதை தொட்டது. அதுவும் பாட்டி கவிதை க்ளாஸ்

இராஜராஜேஸ்வரி said...

ஆனால் நாம்,
நல்ல மனிதர்களாக இருக்க
எப்போதும் தவறிக் கொண்டேயிருக்கிறோம்.//

அருமையான் கவிதை.

இராஜராஜேஸ்வரி said...

சொம்பு நிறைய சுடுநீர்..


பாட்டிக்கான படையல் Nice..