Thursday, July 28, 2011

கலப்படக் கருவறை

என்னால் ஒருபோதும் புரிந்து கொள்ளவே
முடியவில்லை, இந்த
மக்கிப் போன மனிதர்களின் மனங்களை

அதன் தோற்றம் குறித்த யோசனையிலும்
அதன் நிகழ்நிலை குறித்த யோசனையிலும்
எனக்கு மிஞ்சுவது ஏமாற்றமே

கடும் போராட்டத்தில் தோல்விக்கான
முதற்பரிசை எனக்களிக்கிறாரகள்
செம்புக் கிரிடங்கள் அணிந்த அரசர்கள்

குறைகூறி வாழும் குமாரர்களும்
குற்றம்சுமந்து வாழும் குமார்த்திகளும் தான்
இந்த உலகில் தொண்ணூறு விழுக்காடு

மனிதமும், பாசமும், நேசமும் மிக்கவர்கள்
எறும்பாக மாறி ஒருகுழுவாக
அந்த அரசமரத்தில் ஊர்ந்து கொண்டிருக்கிறார்கள்

ஒரு மகிழ்ச்சியான செய்தி
நானும் கூடிய விரைவில் எறும்பாக
அந்தக் குழுவில் இணைய இருக்கிறேன்

மீண்டும் ஒருமுறை முயற்சி செய்கிறேன்
மக்கிப் போன இந்த மனிதர்களின்
மனங்களை புரிந்துகொள்ள முடிகிறதா என்று!!!

8 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் மழை

கவி அழகன் said...

கவிதை பிடிச்சிருக்கு
word verification i edunka

# கவிதை வீதி # சௌந்தர் said...

சிந்திக்கவைக்கும் கவிதை...
சூப்பர்..

M.R said...

கவிதை வரிகள் அருமை.

இராஜராஜேஸ்வரி said...

ஒரு மகிழ்ச்சியான செய்தி
நானும் கூடிய விரைவில் எறும்பாக
அந்தக் குழுவில் இணைய இருக்கிறேன்/

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

settaikaaran said...

முடிவதற்குள் கண்ணீர் வரவைக்கு பாதிக்கப்பட்ட உயிருக்கு எனக்கு வந்தது !

மாய உலகம் said...

//மக்கிப் போன மனிதர்களின் மனங்களை
கடும் போராட்டத்தில் தோல்விக்கான
முதற்பரிசை எனக்களிக்கிறாரகள்

ஒரு மகிழ்ச்சியான செய்தி
நானும் கூடிய விரைவில் எறும்பாக
அந்தக் குழுவில் இணைய இருக்கிறேன்//


படிக்கும்போதே என் மனம் விசிலடித்து கைதட்டிய சத்தம் அந்த விண்ணை எட்டியிருக்கும்...... அருமை நண்பரே.. வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

இன்று எனது வலைப்பதிவில்


நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

http://maayaulagam-4u.blogspot.com