Sunday, August 14, 2011

சுதந்திரம் பற்றிய நம் புரிதல்கள்


ஆங்கிலேயரிடம் இருந்து நம் முன்னோர்கள் (என் தாத்தா, பாட்டி இல்ல) வாங்கித் தந்த இந்த சுதந்திர நாட்டில் நான் தற்போது இருக்கும் நிலவரம் ஏன் ஏறக்குறைய நாம் எல்லோரும் இருக்கும் நிகழ்கால நிலை யாருக்காகவோ, எதற்காகவோ அடிமையாக இருக்க வேண்டிய நிலை தான். எதற்காக அடிமையாக இருக்றோம் என்றால் உணவிற்காகவோ, உடைக்காகவோ, உறவிடத்திற்காகவோ அல்ல, நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஆடம்பர வாழ்க்கைக்குத் தான். வாழ்க்கை தரும் எளிமையான அனுபவங்களையும், அற்புதங்களையும் பெறத் தவறி விட்டு எதற்கோ, எங்கோ திசைதெரியாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறோம். வாழ்தலின் ருசியை இப்போதுள்ள தலைமுறைக்கு வேறுவடிவில் வேறுமுறையில் கொடுக்க பழகி விட்டோம். பெயருக்குத் தான் சுதந்திரம் பெற்றோமே தவிர நாம் ஏதாவது ஒன்றிற்கு அடிமையாகவும், பிறரை நமக்கு ஏதோவொரு விதத்தில் அடிமையாக்கியும் தான் இந்த வாழ்வை கடந்து கொண்டிருக்கிறோம். நம் சுதந்திரத்தை, நம் எளிய வாழ்க்கை முறையினை, நாம் சம்பாதிக்கும் பணத்திடம் அடகு வைத்து விட்டோம். அந்த குற்றவுணர்வு ஒவ்வொரு ஆண்டும் இந்த சுதந்திர தினத்தில் மட்டும் நம் நினைவிற்கு வந்து அடுத்த நாளிலேயே மறைந்தும் விடுகிறது.

தியாகி எனும் போர்வையில் அப்பாவி மக்களை தன் கவனத்திற்கு கொண்டு வந்து தன்னை பிரபலமாக்கி கொள்ளும் தந்திர மனிதர்கள் தான் நாம் பெற்ற இந்த
சுதந்திர இந்தியாவில் இப்போது இருக்கின்றனர். உண்மையான தியாகிகளும், நாட்டு நலன் மட்டுமே தன் நலனாக கொண்ட மனிதர்கள் எல்லாம் ஒரு வேலை
சோற்றுக்கே சிங்கியடித்து வறுமையோடு வழ்வை நகர்த்தி நகர்த்தி இன்று காற்றோடு காற்றாய் கரைந்து விட்டனர். இனி அவர்களை நினைத்துக் கொள்ள
நாம் ஏற்படுத்திக் கொண்டுள்ள இந்த வாழ்க்கையில் ஒருபோதும் சாத்தியமில்லை. இன்றைய சூழ்நிலையில் நமக்கு முதன்மையாகப்படுவது நம் பாதுகாப்பும், நம் குடும்பத்திற்கான வசதியான வாழ்க்கை அமைப்பும் தான். இந்தச் சேதிகளை எல்லாம் செவிடன் காதில் சங்கொலியாய் ஊதலாம் என்றால் அவனுக்கு கூட நேரமில்லை.
அந்த காரணத்திற்காகத் தான் இந்த விஷயங்களை பதிவிட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் என் புலம்பல்களுக்கு வார்த்தைகள் வந்து விழுந்தாலும் மனம் ஏனோ அதை எழுத மறுக்கிறது. அடுத்த சுதந்திர தினத்திற்குள்ளாவது நமக்கான உண்மையான சுதந்திரம் கிடைக்குமா என்ற நம்பிக்கையோடு தான் நானும், இந்த பூமியோடு சுற்றிக் கொண்டிருக்கிறேன்.3 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்...

அந்நியன் 2 said...

//அடுத்த சுதந்திர தினத்திற்குள்ளாவது நமக்கான உண்மையான சுதந்திரம் கிடைக்குமா என்ற நம்பிக்கையோடு தான் நானும், இந்த பூமியோடு சுற்றிக் கொண்டிருக்கிறேன். //

இப்படி அடுத்த வருஷம்...அடுத்த வருஷம்னு சொல்லி அருபத்தி நாளு வருஷம் ஓடி போச்சு.

ஊழல் ஆட்சியில் உள்ள குற்றங்களை யாரேனும் சுட்டி காண்பித்தால் கம்பி எண்ண வைக்கும் இந்திய சட்டம் காந்திய வாதிகளான தியாகிகளை என்றைக்கு நினைவு கூர்ந்தார்கள்?

தாய் மொழி அறியாத பேய் ஆளும் இந்நாட்டில் ஏழையாய் பிறந்த யாரும் உயிரோடு வாழ்வது சில காலம்தான்.

நல்லதொரு அலசல் வாழ்த்துக்கள்

Mohamed Faaique said...

நல்ல பதிவு.. உங்கள் பார்வையும், கருத்துக்களும் சரியானதே!! எல்லோருக்கும் உள்ள ஏக்கம்தான் இது..
சுருக்கமாக சொல்வார்கள்,

இரவில் கிடைத்தது சுதந்திரம், இன்னும் விடியவே இல்லை..