Wednesday, October 12, 2011

அன்பின் அடையாளம்.

18-09-2011 ஞாயிறு அன்று என் வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. நம் யாவருக்கும் மணவாழ்வு என்பது மறக்க முடியாத தருணங்களில் ஒன்று. அந்த நாளில் தான் நம் சொந்தங்களும், நண்பர்களும் நம்மை கடவுளை போல பாவித்து நம்மை அலங்கரித்து, நம்மை உபசரித்து ஒரு கோலாகலமான திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.
அதுபோன்றதொரு அற்புதமான நேரத்தில் தான் முகமறியாத அந்த முகங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத சந்தோசத்தையும், அனுபவத்தையும் எனக்களித்தனர். அவர்கள் என் ட்விட்டுலக நண்பர்கள் கார்க்கி, பரிசல், வேதாளம், கேசவன், குள்ளபுஜ்ஜி. நேரில் சென்று அழைப்பு கொடுத்து வரவேற்கும் சராசரி உபசரிப்பைக் கூட அவர்களுக்கு நான் அளிக்கவில்லை. போனில் தொடர்பு கொண்டது மட்டும் தான். பரிசல் திருப்பூரில் இருந்து வந்திருந்தார். மற்ற நண்பர்கள் சென்னையிலிருந்து வந்திருந்தனர். என் வரவேற்பு நிகழ்ச்சியில் அவர்களைப் பார்த்த வினாடி எனக்கு பதற்றமே தொற்றிக் கொண்டது. கூட்ட நெரிசலில் அவர்கள் மெதுவாக மேடைக்கு
என்னை வந்தடைந்த சில வினாடிகளிலேயே எங்கள் சந்திப்பு முடிந்து விட்டது. எனக்காக அவர்களின் எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு நாள் முழுவதும் பயணம் செய்து என்னை சந்தித்தவர்களிடம் தனியாக இரண்டு நிமிடம் பேசக்கூட அவகாசம் கிடைக்கவில்லை. அந்த வருத்தம் இப்போதும் என்னை வருத்திக் கொண்டிருக்கிறது. இவர்கள் இப்போது எனக்கு ஏதோ உறவினர்கள் நெருக்கமான நண்பர்களாகி விட்ட உணர்வே ஏற்படுகிறது.
நேற்று கூட பரிசல் அண்ணனிடம் உரிமையோடு எனக்கான உதவிகளை தயங்காமல் கேட்டுப் பெற்றுக் கொண்டது இந்த உறவு முறையால் தான். நன்றி என்ற ஒற்றை சொல்லில் இவர்களின் நட்பை நான் ஈடுகட்டி விட முடியுமா என்ன???

இடமிருந்து வலம் : கார்க்கி, பரிசல், வேதாளம்@அர்ஜூன், கேசவன், குள்ளபுஜ்ஜி.


மணப்பெண்ணும், நானும்.



மணப்பெண்ணின் அம்மா, அப்பாவுடன்....


என் அம்மா, அப்பாவுடன்...


திரு. கே.ஈ. கிருஷ்ணமூர்த்தி, M.L.A. அவர்கள் (பருகூர் தொகுதி)


திரு. கே.பி. அன்பழகன் M.L.A. அவர்கள் (பாலக்கோடு தொகுதி)


திருமதி. மனோரஞ்சிதம் நாகராஜ், M.L.A அவர்கள் (ஊத்தங்கரை தொகுதி)

10 comments:

  1. இது தான் அன்பின் அடையாளம்

    ReplyDelete
  2. //நன்றி என்ற ஒற்றை சொல்லில் இவர்களின் நட்பை நான் ஈடுகட்டி விட முடியுமா என்ன//

    முடியாதுதான். அக்கவுண்ட் நம்பர் தர்றேன்.. ஒரு ரெண்டு கே ட்ரான்ஸ்ஃபர் பண்ணி உங்க அன்பைக் காமிங்களேன்...

    :))

    ReplyDelete
  3. btw,

    1. கீழ இருக்கற ஃபோட்டோஸெல்லாம் பார்த்தேன். எல்லாம் படா படா விஐபி. அதுக்கெல்லாம் மேல எங்க ஃபோட்டோவைப் போட்டு, உங்க இதயத்துல முதலிடத்துல இருக்கோம்னு சொன்னீங்களே.. அது போதும்!

    2. அந்தக் கொரியர்காரனை விடாதீங்க.. பத்திரிகை இன்னும் வர்ல. :)

    ReplyDelete
  4. //ஒரு ரெண்டு கே ட்ரான்ஸ்ஃபர் பண்ணி உங்க அன்பைக் காமிங்களேன்..//

    ரெண்டு சி. கே அல்ல. :))

    ReplyDelete
  5. வரவேற்பு விழாவிற்கு வந்ததில் எங்களுக்கு மட்டில்லா மகிழ்ச்சி தான் :))))

    ReplyDelete
  6. ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க :) என்னால வரமுடியலயேனு ஒருபக்கம் வருத்தமாகவும் இருந்துச்சு.

    பரிசல் அண்ணன் சொன்னது மாதிரி பெரிய பெரிய விஐபிக்களை எல்லாம் கீழ போட்டு நம்ம நண்பர்கள மேல போட்டிருக்கிறதே ரொம்ப சந்தோசமா இருக்கு :))

    ReplyDelete
  7. இருந்தாலும் அந்த‌ டிஜிட்ட‌ல் லைப்ர‌ரிய‌ பார்க்காம‌ வ‌ந்துட்டோம் :)

    ReplyDelete
  8. நெகிழ வைக்கும் பதிவு..

    நான் அவசியம் வந்திருக்க வேண்டும்..

    எனதன்புகள்!!

    ReplyDelete