Thursday, June 2, 2011

கனவுகளின் வரைபடம்

ஒரு வழியாக ஒரளவிற்கு என் அறையின் கலை வேலைப்பாடுகள் முடிவடைந்து விட்டன. ஒரு பறவை எப்படி தனக்கென பாதுகாப்பான கூட்டை ஏற்படுத்திக் கொண்டு உயிர் வாழுமோ, அப்படித்தான் நானும் என் அறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அங்கு நான் மட்டுமல்ல, என் கனவுகளும், ஆசைகளும் உடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. யாவருக்கும் பிடித்த முதன்மையான நண்பன் அவர்களது அறையாகத் தானிருக்கும். காரணம், அங்கு தான் நாம் தினம் தினம் வெளிப்படுத்திடாத நம் உணர்வுகள் பாதுகாப்பாய் தேங்கிக் கிடக்கின்றன. ஒவ்வொருவரின் அறையும் நம் விருப்பங்களை பிரதிபலன் பாராது நிறைவேற்றிக் கொடுக்க வல்லது. எனது அறையும் எனக்கு அப்படித்தான். தெய்வீக சந்நிதியிலும் கிடைக்காத பல பரவசமிக்க அனுபவங்களும், புதிய புதிய எண்ணங்களும் அது தினம் தினம் தந்தபடியே இருக்கின்றன.
நகர்புறங்களில் வசிப்பவர்கள் இந்த வேலைப்பாடுகளை சுலபமாக பெற முடியும். ஆனால் என்னைப் போன்று ஏதேனும் ஒரு ஒன்றியத்தில் ஒன்றிக்
கொண்டிருப்பவர்களுக்கு சாத்தியப்படுவது கடினம். இங்குள்ள என் ஓவிய நண்பன் சிவா என்பவரை மட்டும் வைத்துக் கொண்டு பதினைந்து நாட்களில் முடிக்கப்பட்ட வேலை இது. எனது கூடு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? என்று பார்த்து விட்டு கருத்துக்களை பதிவிடுங்கள் அல்லது மெயிலுங்கள்.










நானும், எனது புத்தகங்களும்...

7 comments:

  1. . தெய்வீக சந்நிதியிலும் கிடைக்காத பல பரவசமிக்க அனுபவங்களும், புதிய புதிய எண்ணங்களும் அது தினம் தினம் தந்தபடியே இருக்கின்றன. //

    அருமை.
    உங்கள் புத்தகங்களுக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துவிடுங்கள்.

    நிர்மாணித்த சாம்ராஜ்ஜியத்திற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. உங்கள் ரசனைக்கும் ஆர்வத்திற்க்கும் என் பாராட்டுக்கள்..

    பார்ப்பதற்க்கு மிகவும் அழகாக இருக்கிறது...

    ReplyDelete
  3. இந்த அறை தங்களின் போதிமரம்போல் தங்களுக்கு ஞானம் கொடுக்கும் என நம்புகிறேன்..

    ReplyDelete
  4. உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும்போது வந்து பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_2241.html

    ReplyDelete
  5. உங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்

    நேரமிருக்கும் போது பார்வையிடவும்

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_28.html

    ReplyDelete
  6. ரொம்ப அழகாருக்கு வரைபடம்..

    ReplyDelete