Wednesday, October 31, 2018
Wednesday, October 3, 2018
நாளைக்கானவை....
காலண்டரில் தேதி கிழிபட கிழிபட இறக்கும் இறந்த காலங்கள் கனவுகளாய் உருமாறி எதிர்காலத்தில் படிந்து விடுகிறது. நாளைக்கான நம் பெரும்பாலான தேவைகளை நம் இறந்த காலங்களே தீர்மானிக்கின்றன. கனவெல்லாம் இன்றைய காலகட்டத்தில் காணவேண்டியதில்லை, நாம் வளர்வது எப்படி இயல்போ அதைப்போலவே நம் தேவைகளோடு அதுவும் சேர்ந்து கொள்கிறது.
Sunday, September 30, 2018
நீர் உலகம்...
" டாடி இந்தா " என மகன் நீட்டிய ஒரு சொம்பு தண்ணீரில் என் முகம் பார்த்தேன். அலையலையாய், கலங்கலாய் பாதியழிந்த உருவமாய் என் முகம் அதில் காட்சியளித்தது.
எதிர்படும் யாவையும் அவன் சேமிக்கும் அன்பைப் போல அது சேகரித்துக் கொண்டே இருந்தது. அந்தக் கணம் அன்பைப் பெறுவதும், கொடுப்பதுமான பாடத்தை உலகம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது.
Subscribe to:
Posts (Atom)


